இளம் வீராங்கனை பூஜா ஸ்வேதாவிற்கு கோவை ரயில் நிலையத்தில் சிறப்பான வரவேற்பு!!
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற தேசிய அளவிலான டிராக் சைக்கிள் பந்தயத்தில் தங்கம் உள்ளிட்ட இரு பதக்கங்கள் வென்ற கோவையை சேர்ந்த இளம் வீராங்கனை பூஜா ஸ்வேதாவிற்கு ரயில்நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 73வது தேசிய அளவிலான டிராக் சைக்கிள் பந்தயம் நடைபெற்றது.
இதில் கோவையை சேர்ந்த பூஜா ஸ்வேதா கலந்துகொண்டு ஒரு தங்கம் மற்றும் வெண்கல பதக்கம் வென்ற சாதனை புரிந்துள்ளார். இந்நிலையில் பதக்கம் வென்று கோவை ரயில்நிலையம் வந்த வீராங்கனை பூஜா ஸ்வேதாவிற்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு பெற்றோர் மற்றும் உறவினர்கள் பொன்னாடை அணிவித்தும் இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பூஜா ஸ்வேதா, இந்த வெற்றி தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், தனது வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பயிற்சியாளர், பெற்றோர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறினார்!
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப், கோவை.
Comments