சிங்கம்புணரி அருகே உளவியல் பயிற்சிக்காக காவல்துறையினர் புத்துணர்வு நடைப் பயணம்!
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முனைவர் செந்தில்குமார் அறிவுறுத்தலின் படி காவல்துறையினர் புத்துணர்வு நடைபயணம் மேற்கொண்டனர். சிவகங்கை மாவட்டத்தில் பணியாற்றும் காவல்துறையினர் உளவியல் ரீதியாக பாதிக்கப்படாமலிருக்க புத்துணர்வு நடைப் பயணம் மேற்கொள்ளப்படுகிறது. கடந்த மாதம் எஸ்.புதூர் ஒன்றியம் மேலவண்ணாரிருப்பில் புத்துணர்வு நடைப் பயணம் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று பிரான்மலையில் புத்துணர்வு நடைப் பயண நிகழ்ச்சி நடந்தது. நடைபயணம் காலை 7 மணிக்கு சதுர்வேதமங்கலத்தில் துவங்கியது.
மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் ஆய்வாளர்கள், துணை ஆய்வாளர்கள் மற்றும் திருப்பத்தூர் சப் டிவிஷனில் பணியாற்றும் அனைத்து காவல்துறையினரும் நடைபயணமாக அங்கிருந்து 6 கிலோமீட்டர் தூரமுள்ள பிரான்மலை அடிவாரத்திற்கு நடந்து சென்றனர். நடைபயணத்தில், காவல்துறையினரிடையே மாவட்ட காவல் கண்காணிப்பாளர், முனைவர்.செந்தில்குமார் பேசும்போது, காவலர்கள் மன அழுத்தம் இல்லாமல் மகிழ்ச்சியுடன் பணியாற்றுவதற்கு ஆலோசனைகளை வழங்கினார்.
- அப்துல்சலாம், திருப்பத்தூர்.
Comments