சட்டமன்ற பொதுக்கணக்குகுழுவின் ஆய்வுக்கூட்டம்!!
தமிழ்நாடு சட்ட மன்ற பொது கணக்கு குழுவின் ஆய்வுக்கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.கோவையில் 5 இடங்களில் இக்குழு நேற்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
தற்போது தமிழ்நாடு சட்டமன்ற பொது கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்று முடிந்தது.
சட்டமன்ற உறுப்பினர்கள், பிஆர்ஜி. அருண்குமார், எஸ். காந்திராஜன், சரஸ்வதி, மா. சிந்தனைச்செல்வன், எஸ். சுதர்சனம், பிரகாஷ், பூண்டி. கே. கலைவாணன், எம். ராஜ முத்து, தி. வேல்முருகன், எம். எச். ஜிவாஹிருல்லா. உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் பி. ஆர். நடராஜன், சண்முக சுந்தரம், கோவை மாவட்ட ஆட்சியர் ஜி. ச. சமீரன், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுங்கரா, ஆகியோரும் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப், கோவை.
Comments