அரசு அதிகாரிக்கு ஆப்பு வைத்த நீதிமன்றம்! வெறும் 3000 ரூபாய் லஞ்சம்! 4 ஆண்டு சிறை! 20 ஆயிரம் அபராதம்!!
ஆவின் துணை மேலாளர் லஞ்சம் பெற முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் 4 ஆண்டு சிறை 20 ஆயிரம் அபராதம் விதித்த கோவை நீதிமன்றம். கோவை மாவட்டம் ராமநாதபுரம் ஆவின் பூத் முகவர் உதயகுமார் மீது ஆவின் ஊழல் தடுப்புப் பிரிவில் புகார் இருந்துள்ளது அந்த மனு மீதான சாதகமாக அறிக்கை வழங்க கோவை ஆவின் சந்தைப்படுத்துதல் துணை மேலாளர் தங்கவேல் என்பவர் கடந்த 2013 ஆம் ஆண்டு ரூபாய் 3000 லஞ்சம் கேட்டுள்ளார்.
இதையடுத்து உதயகுமார் லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் கொடுத்து அதன் பேரில் தங்கவேல் லஞ்சம் வாங்குகையில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் அவரை கைது செய்தனர். இந்த இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றம் நேற்று வழங்கிய தீர்ப்பில் தங்கவேலுக்கு 4 ஆண்டு சிறை மற்றும் 20 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. மேலும் இதுபோல் லஞ்ச புகார்களை அளிக்க 0422- 2449550 என்று என்னை தொடர்பு கொள்ள லஞ்ச ஒழிப்பு துறை அறிவித்துள்ளது.
-சாதிக் அலி.
Comments