பெட்ரோல் விலை இருசக்கர வாகனங்களுக்கு லிட்டருக்கு 25 ரூபாய் குறைப்பு! அதிகாரபூர்வ அதிரடி அறிவிப்பு!!
இரு சக்கர வாகனங்களுக்கு மட்டும் பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 25 ரூபாய் குறைத்து, ஜார்கண்ட் மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப மாதம் இருமுறை விலை நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது. இம்முறை மாற்றி அமைக்கப்பட்டு, தினசரி பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறையை மத்திய அரசு அமல்படுத்தியது.
விலையை நிர்ணயம் செய்யும் பொறுப்பு எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. தினசரி பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலுக்கு வந்ததால், இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலைகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தது. இதனால் பெரும்பாலும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும், பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது, சிறிதளவில் இறக்கம், ஏற்றம் கண்டு வந்தது. கடந்த சில மாதங்களாக பெட்ரோல் டீசல் விலையில் அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், இரு சக்கர வாகனங்களுக்கு மட்டும் பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 25 ரூபாய் குறைத்து, ஜார்கண்ட் மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. வருகின்ற ஜனவரி 26 முதல் இது அமலுக்கு வரும் என்று அம்மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அறிவித்துள்ளார்.
-Ln. இந்திரா தேவி முருகேசன், சோலை ஜெயக்குமார்.
Comments