காவலரின் கலக்கல் தீபாவளி..!! திருடனைப் பற்றி தகவல் கொடுத்த குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாடிய DIG..!!!
கருமத்தம்பட்டியில் இரண்டு நாட்களுக்கு முன்பு பக்கத்து வீட்டில் நள்ளிரவில்புகுந்த திருடர்களை பற்றி தகவல் தந்த நாகராஜ், கோமதி குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாடிய கோவை சரக DIG முத்துசாமி அவர்கள்
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி செந்தில் நகரை சேர்ந்தவன் நிர்மலா கணவரை இழந்த இவர் இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். நிர்மலா அருகாமையில் இருக்கும் தன் தாயார் வீட்டில் இரவு நேரத்தில் இரண்டு குழந்தைகளுடன் தங்குவது வழக்கம்.
இதேபோல் இரண்டு நாட்களுக்கு முன் நிர்மலா தன் தாயார் வீட்டுக்கு இரவு நேரத்தில் இரு குழந்தைகளுடன் சென்ற நிலையில் பூட்டியிருந்த நிர்மலாவின் வீட்டை உடைக்கும் சத்தம் கேட்கவே நாகராஜ் கோமதி தம்பதியினர் அக்கம்பக்கத்தில் உள்ள நண்பர்களுக்கும் காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்ததை அடுத்து அங்கு விரைந்து வந்த பொது மக்களும் காவல்துறையினரும் மர்ம நபர்களில் ஒருவரை பிடிக்க மற்றொருவர் தப்பி சென்றுள்ளார்.
பிடிபட்ட மர்ம நபரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட கோவை சரக DIG முத்துசாமி அவர்கள் சோமனுறை சேர்ந்த நாகராஜ், கோமதி குடும்பத்தினருடன் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவர்களைப் பாராட்டி அவர்களுடன் நேற்று தீபாவளி பண்டிகையை கொண்டாடினார். காவலரின் இந்த செயல் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.நாளைய வரலாறு செய்திக்காக,
-முஹம்மது சாதிக் அலி.
Comments