சிவகங்கை மாவட்ட சைல்டு லைன் சார்பாக 'குழந்தைகள் நண்பன் வார விழா'!

   -MMH 

  சிவகங்கை மாவட்ட சைல்டு லைன் குழு சார்பாக நவம்பர் 14 முதல்  குழந்தைகள் நண்பன் வார விழா கொண்டாடப்படுகிறது.

ஒரு வாரம் முழுவதும் கொண்டாடப்படும் இந்நிகழ்ச்சியை கடந்த 17ஆம் தேதியன்று மாவட்ட சட்டப்பணிகள் ஆணைய செயலாளர் பரமேஸ்வரி சிவகங்கையில் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சைமன் ஜார்ஜ் மற்றும் அலுவலர்கள், குழந்தைகள் இல்ல கண்காணிப்பாளர் ராஜகுமாரி, குழந்தைகள் கடத்தல் தடுப்புப்பிரிவு சார்பு ஆய்வாளர் விஜயா மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.

சைல்டு லைன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்த் பாபு வரவேற்று பேசினார். குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சைமன் சார்ஜ் தலைமை தாங்கினார். அரசினர் இல்ல குழந்தைகளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டன. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சைல்டு லைன் இயக்குனர் ஜீவானந்தம் மற்றும் குழந்தைகள் சார்ந்த ஆர்வலர்கள் பரிசுகளை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியை சைல்டு லைன் பணியாளர்கள் ஒருங்கிணைப்பு செய்தனர்.

- ராயல் ஹமீது, பாரூக்.

Comments