பற்றி எரிந்த துணிக்கடை!! மர்ம நபர்களின் துணிகர சம்பவம்!!
அன்னூர்: கோவில்பாளையத்தில் மர்ம நபர்கள் துணிக்கடைக்கு தீ வைப்பு காவல்துறை அதிகாரிகள் விசாரணை.
கோவை மாவட்டம் அன்னூர் தாலுக்கா கோவில்பாளையம் சத்தி ரோட்டில் துணிக்கடை நடத்தி வருபவர் சுனிதா சம்பவத்தன்று வழக்கம் போல் துணிக்கடை திறக்கப்பட்டு, பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது சுமார் மாலை 6 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் கையில் பெட்ரோல் நிரப்பி வைத்திருந்த கேனில் தீயை பற்ற வைத்து கடையின் மேல் வீசி உள்ளனர்.
இதில் கடையில் முன்பக்க கண்ணாடி உடைந்து தீ பற்றி சில துணிகளும் எரிந்து சேதம் ஆயின. இதைப்பற்றி சுனிதா கோவில்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் மர்ம நபர்களை தேடி வருகின்றனர். எப்போதும் போக்குவரத்து நிறைந்த மக்கள் நடமாட்டம் உள்ள சக்தி சாலையில் நடந்த இந்த துணிகர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-முகமது சாதிக் அலி.
Comments