விலைவாசி உயர்வுக்கு எதிரான மக்கள் எழுச்சி போராட்டம் பதாகைகளை ஏந்தி குறிச்சி சர்க்கிள் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்..!!!

-MMH 

       கோவை தெற்கு மாவட்டம் குறிச்சி சர்க்கிள் காங்கிரஸ் கட்சியின் சார்பாக நவம்பர் 22 முதல் 29 வரை மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் என்ற பெயரில் ஒன்றிய அரசின் பல்வேறு மக்கள் விரோத திட்டங்கள் மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து நேற்று போத்தனூரில் நூற்றுக்கும் மேற்பட்டோர்  பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்தப் போராட்டத்தின் முக்கிய கோரிக்கைகளாக பெட்ரோல், டீசல் , சமையல் எரிவாயு போன்ற அத்தியாவசிய எரிபொருள்களின் கடுமையான விலை ஏற்றம், காங்கிரஸ் ஆட்சியின்போது உருவாக்கப்பட்ட எல்ஐசி, வங்கிகள்  ரயில்வே  மற்றும் பொதுப்பணி நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை தடுக்க வலியுறுத்தியும் , 

வேலையிழப்பு வேலையின்மை போன்ற அவலங்களை எடுத்துரைக்கும் வகையில் இந்த போராட்டம் குறிச்சி சர்க்கிள் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் முகமது இஸ்மாயில் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர் மாநில செயல்  தலைவர் மோகன் குமாரமங்கலம்  முன்னிலை வகித்தார்கள்.

இந்த பிரம்மாண்ட ஆர்ப்பாட்டத்தில்  பகவதி தெற்கு மாவட்ட தலைவர் மதுசூதனன், தெற்கு மாவட்ட துணை தலைவர் விசி முருகன், தெற்கு மாவட்ட செயலாளர் திருநகர் மணி ,தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர்  M.முகம்மது ஹாரூன், லோகநாதன், முகமது அஸ்லாம் ,பர்வதம்மா, சுப்புலட்சுமி, பாஷா, அசாருதீன் , கருப்பசாமி, நாட்ராயன், ராபியா, பர்வீன் ,ராணி, ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நாளை வரலாறு செய்திகளுக்காக, 

-ஈசா, சாதிக் அலி.

Comments