தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் அரசு ஆணைப்படி உயர்த்திக் கொடுக்க வேண்டுகோள்! தொழிலாளர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா! !
தமிழகத்தில் ஊட்டி, வால்பாறை,தேனி மாவட்டம், நெல்லை மாவட்டம் போன்ற மலைப் பிரதேசங்களில் அதிக அளவு டீ எஸ்டேட்டுகள் உள்ளன இங்கு அரசுக்குச் சொந்தமான மற்றும் தனியார் டீ எஸ்டேட் களில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அரசின் டீ எஸ்டேட்களில் தமிழ்நாடு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் சுமார் ஒன்றரை லட்சம் பேர் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர் இவர்களுக்கு ஒரு நாள் சம்பளமாக 347 ரூபாய் கொடுக்கப்பட்டு வந்த நிலையில் அந்த சம்பளத்தை நாநூற்றி இருபத்தி ஐந்து ரூபாயாக உயர்த்தி வழங்க தமிழக அரசு மூன்று மாதத்திற்கு முன்பு அரசாணை பிறப்பித்துள்ளது. ஆனால் அந்த ஊதிய உயர்வு இன்னமும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் கைகளுக்கு சென்று சேரவில்லை என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
வால்பாறை சுற்றிலுமுள்ள பல டீ எஸ்டேட்களில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் போதிய வருமானம் இன்றி கடுமையான சூழ்நிலையில் வேலை பார்த்து வருகின்றனர்.
இவர்கள் அனைவருமே அரசாங்கம் அறிவித்துள்ள ஊதிய உயர்வு எப்போது கிடைக்கும் என எதிர்பார்த்து காத்துக் கிடக்கின்றனர்.
எனவே எஸ்டேட் நிர்வாகங்களும் அரசு அதிகாரிகளும் இவர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து நல்ல முடிவுகளை எடுக்கும்படி வேண்டுகோள் விடுக்கிறார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-S.ராஜேந்திரன், திவ்ய குமார் வால்பாறை .
Comments