வழக்கத்தைவிட குறைவாகவே பட்டாசுகள் விற்பனை வியாபாரிகள் வருத்தம்!!

   -MMH 

  தீபாவளி என்றாலே மக்கள் முதலில் 'பர்ச்சேஸ்' செய்வது பட்டாசு தான். ஒரு காலத்தில் தீபாவளிக்கு ஒரு வாரம் முன்பே தெருக்களில் பட்டாசு சத்தம் காதை கிழிக்கும். கடந்தாண்டு, கொரோனா முதல் அலை ஊரடங்கின் போது, வழக்கத்தை விட குறைவாகவே பட்டாசுகள் விற்பனை ஆனது. இந்த ஆண்டு இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில், புது புது ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்தன. பசுமை பட்டாசுகளும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது. ஆனால் விற்பனை கடந்த ஆண்டை விட, மேலும் 20 சதவீதம் குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்!!

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஹனீப் கோவை.

Comments