அத்துணையும் நடிப்பா..!!! பாஜகவினர் செயல்பாட்டால் மக்கள் குழப்பம்..!!!

   -MMH 

   சென்னை மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. ஊரே வெள்ளக் காடாக மாறி மக்கள் அவதிப்பட்டு கொண்டிருக்கும் இந்த நிலையில் தமிழக அரசும் பல சமூக அமைப்புகளும் மழை வெள்ள நீரால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியிலும் அவர்களுக்கு நிவாரணங்கள் கொடுத்தும் உதவி வருகின்றனர். 

நிலைமை இப்படி இருக்க பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் , கரு .நாகராஜ் ஆகியோர் அடங்கிய பாரதிய ஜனதா குழுவினர் வெள்ள பாதிப்பு பகுதிகளில் மக்களுக்கு உதவி செய்வது போல் அரங்கேற்றிய இந்த சம்பவத்தை கண்ட பொதுமக்கள் இவர்கள் என்னதான் செய்கிறார்கள் உதவியா அல்லது இதெல்லாம் நடிப்பா என்ற குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். இதுமட்டுமின்றி இவர்கள் பண்ணுவது பார்த்தால் வெள்ள நீரே பரவாயில்லை என்று மக்கள் கொந்தளித்து வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-பாஷா, திருப்பூர்.

Comments