இரயில் போலீசாரால் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட பீகார் வாலிபர்!!

 

-MMH

        ரயில் மூலம் கஞ்சா கடத்தி வந்த பீகார் இளைஞரை கோவை ரயில்வே பாதுகாப்பு படையினர் இன்று கைது செய்தனர். வெளி மாநிலங்களில் இருந்து விரைவு ரயில்களில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக வந்த தகவலின் பேரில் கார்த்திகேயன் உதவி - ஆய்வாளர், குற்ற புலனாய்வு துறை, இரயில்வே பாதுகாப்பு படை மற்றும் தனபாலையா உதவி - ஆய்வாளர், இரயில்வே பாதுகாப்பு படை, கோவை ஆகியோர் தலைமையில் RPF படையினர் இன்று 06/11/21 பீகார் மாநிலம், பாட்னாவில் இருந்து கேரள மாநிலம், எர்ணாகுளம் செல்லும் விரைவு ரயிலில் (02644) காலை 10. 30 மணியளவில் கோவை ரயில் நிலையத்தில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, முன்பதிவு பெட்டியில் (S-4) இருந்த ஒருவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் பீகார் மாநிலம் கட்டிஹார் மாவட்டத்தைச் சேர்ந்த பிஷேஷ் குமார் யாதவ் (26) என்பதும், இவர் ரயிலில் கேரளாவுக்கு கஞ்சா கடத்திச்செல்வதும் தெரிய வந்தது. அவரிடமிருந்து சுமார் 1. 5 கிலோ அளவிலான கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை கோவை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸாரிடம் ரயில்வே பாதுகாப்பு படையினர் ஒப்படைத்தனா்!!

நாளைய வரலாறு செய்திக்காக 

-ஹனீப் கோவை.

Comments