பள்ளத்தில் விழுந்து சிகிச்சையில் இருந்த ஆண் குட்டி யானை பலி..!!
பூச்சியூர் அருகே உடல் நல குறைவுடன் சுற்றித்திரிந்த குட்டி யானை சிகிச்சை பலனின்றி பலி. கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தண்ணீர் மற்றும் உணவு தேடி வந்த குட்டி யானை பள்ளத்தில் வழுக்கி விழுந்தது. பொக்லைன் இயந்திரத்தின் உதவியோடு குட்டி யானையை CRPF காவலர்களுடன் மீட்டெடுத்த வனத்துறையினர் கால்நடை மருத்துவக் குழுவுடன் யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு யானை வனப்பகுதிக்குள் சென்றது.
கண்காணிப்பில் இருந்த யானை நேற்று பூச்சியூர் அருகே உள்ள வனப்பகுதியில் உடல்நலக்குறைவால் கீழே படுத்துவிட்டது. விரைந்து வந்த வனத்துறையினரும் கால்நடை மருத்துவக் குழுவும் குட்டி யானைக்கு இரவுபகலாக சிகிச்சை அளித்தனர் எனினும் சிகிச்சை பலனின்றி ஆண் குட்டி யானை பரிதாபமாக பலியானது. சமூக ஆர்வலர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் முன்பு உடல் கூறு ஆய்வு செய்யப்பட்டதில் யானைக்கு நீர்சத்து குறைபாடு ஏற்பட்டு நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டதாலையே யானை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-முஹம்மது சாதிக் அலி.
Comments