கோவையில் மாணவியின் தற்கொலைக்கு காரணமான தனியார் பள்ளி முற்றுகை!

-MMH 

  கோவை லாலி ரோடு பால் கம்பெனி அருகே உள்ள தனியார் பள்ளியில் பயின்று வந்த 12ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

விசாரணையில் பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி, என்பவர் மாணவியை பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்துகொண்டார்.

அதைத்தொடர்ந்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன், அவர்கள்  தலைமையில் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

இந்த முற்றுகைப் போராட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், தலைமையில் IKP மாநில செயலாளர் லேனா இசாக், தகவல் தொழில் நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் சம்சுதீன், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் மன்சூர், சிராஜ்தீன், உள்ளிட்ட நிர்வாகிகள் தோழமை கட்சியினர் பங்கேற்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக, 

-ஹனீப், கோவை.

Comments