பிரபல நடன இயக்குநர் கூல் ஜெயந்த் மறைவு!!
தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபல நடன இயக்குநராக இருந்தவர் கூல் ஜெயந்த். இவரது இயற்பெயர் ஜெயராஜ் ஆகும். 1996ஆம் ஆண்டு வெளியான ‘காதல் தேசம்’ திரைப்படத்தில் நடன இயக்குநராக அறிமுகமானவர் அப்படத்தில் இடம்பெற்ற ‘முஸ்தஃபா’, ‘கல்லூரிச் சாலை’ ஆகிய பாடல்களின் மூலம் பிரபலமானமானார்.
முன்னதாக பிரபு தேவா மற்றும் ராஜு சுந்தரம் ஆகியோரது நடனக் குழுவிலும் கூல் ஜெயந்த் இருந்துள்ளார். பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடன இயக்குநராக பணிபுரிந்த கூல் ஜெயந்த் மலையாளத்திலும் மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் புற்றுநோயினால் பாதிக்கபட்டு சிகிச்சையில் இருந்தவர் இன்று காலை சென்னையில் காலமானார்.
-நவாஸ்.
Comments