காளாப்பூரில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த விஷப்பாம்புகளைப் பிடித்த சிங்கம்புணரி தீயணைப்புத்துறையினர்!
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே உள்ள அ.காளாப்பூர் தெற்கு தெரு குடியிருப்பு பகுதிக்குள் பாம்புகள் செல்வதை பால்ராஜ் என்பவர் பார்த்திருக்கிறார். அவர் உடனடியாக சிங்கம்புணரி தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
விரைந்து வந்த சிங்கம்புணரி தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலைய சிறப்பு அலுவலர் பிரகாஷ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று அங்கு குவிக்கப்பட்டிருந்த தேங்காய் மட்டை குவியல்களை அகற்றித் தேடியதில் அங்கு இரண்டு 'சாரைவளனை' என்ற கொடிய வகை விஷபாம்புகள் இருந்தன. அவற்றை உயிருடன் பிடித்து வனப்பகுதியில் விடுவித்தனர். கொடிய விஷபாம்புகளை பிடித்து, அப்பகுதி மக்களை நிம்மதி அடையச் செய்த தீயணைப்பு வீரர்களை மக்கள் வெகுவாக பாராட்டினர்.- அப்துல்சலாம்.
Comments