கடன் வழங்கும் செயலி மூலம் கடன் பெற்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை! சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை!!
கோவை வீரியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுவாதி (வயது 24). இவர் தனியார் நிறுவனத்தில் கணக்காளராக வேலை செய்து வருகிறார். இவர் தனது செல்போனில் கடன் பெறுவதற்காக 30-க்கும் மேற்பட்ட செயலிகளை பதிவிறக்கம் செய்து வைத்தார்.
அந்த செயலிகளில் ஆன்லைன் மூலம் அவர் சிறிது சிறிதாக ரூ.57 ஆயிரம் வரை கடன் பெற்று இருந்தார். இந்த நிலையில் தான் வாங்கிய கடனுக்காக ரூ.74 ஆயிரம் வரை பணம் செலுத்தி இருந்தார்.
ஆனால் அவர் வாங்கிய கடனை முறையாக செலுத்தவில்லை என்று கூறி அந்த செயலிகளின் நிர்வாகிகள் தொடர்ந்து பேசி உள்ளனர். பின்னர் அவர்கள் அந்த பெண்ணுக்கு மிரட்டல் விடுத்ததுடன், அவருடைய பான்கார்டை தவறாக சித்தரித்து சிலருக்கு அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து சுவாதி கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-S.ராஜேந்திரன்.
Comments