கோவையில் மாவட்ட ஆட்சியர் அவர்களுடன் அனைத்து கூட்டமைப்பு நிர்வாகிகள் சந்திப்பு!! சிறைவாசிகள் விடுதலை குறித்து கோரிக்கை!!
கோவையில் மாவட்ட ஆட்சியர் சமீரன், அவர்களை கோவை மாவட்ட அனைத்து கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் இனாயத்துல்லாஹ், சாதிக்அலி, ஒருங்கிணைப்பாளரும் மனிதநேய ஜனநாயக கட்சியின் துணைப் பொதுச் செயலாளருமான சுல்தான் அமீர், ஆகியோர் தலைமையில், கூட்டமைப்பு நிர்வாகிகள் சந்தித்தனர்.
இச்சந்திப்பில் அண்ணா பிறந்தநாளையொட்டி தமிழக அரசு அறிவித்துள்ள 700 சிறைவாசிகள் விடுதலை ஆணையில் இஸ்லாமிய, சிறைவாசிகள் இடம் பெறாதது சிறுபான்மை மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது ஆகவே தமிழக முதல்வர் அவர்கள் இவ்விஷயத்தில் நியாயமான முறையில் நடவடிக்கை எடுத்து சிறைவாசிகள் விடுதலை விஷயத்தில் ஜாதி, மத, வழக்கு, பேதமில்லாமல் அனைவரையும் விடுதலை செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் மாவட்ட ஆட்சியரிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மேலும் இதுதொடர்பாக திங்கட்கிழமை தமிழக முதல்வர் திரு மு. க. ஸ்டாலின் அவர்களை கூட்டமைப்பு நிர்வாகிகள் சந்திக்க முடிவு செய்துள்ளனர். அதை தொடர்ந்து திமுக பொறுப்பாளர் நா.கார்த்திக், அவர்களையும் நேரில் சந்தித்து மேற்கண்ட கோரிக்கைகளை அளித்தனர்.
இச்சந்திப்பில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், அவர்கள் தலைமையில் IKP மாநில செயலாளர் லேனா இசாக், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் கோவை சம்சுதீன், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர்கள் ATR பதுருதீன், சிங்கை சுலைமான், விவசாய அணி மாவட்ட செயலாளர் அன்வர்,
இளைஞரணி மாவட்ட செயலாளர் அன்சர் பாஷா, மாவட்ட பொருளாளர் பைசல் ரகுமான், மாவட்ட துணைச் செயலாளர்கள் அபுதாஹீர், சதாம் உசேன், மனித உரிமை அணி மாவட்ட செயலாளர் பாதுஷா, வணிகர் சங்க மாவட்ட பொறுப்பாளர்கள் ஹாருண், நவ்பல் பாபு, தொழிற்சங்க மாவட்ட பொருளாளர் ரியாசுதீன், சிராஜுதீன், மற்றும் அனைத்து கட்சி, இயக்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப், கோவை.
Comments