தங்ககாசுகள் பரிசளிப்பு! மஜக பொதுச்செயலாளர் பங்கேற்ப்பு!
IKP-யின் சார்பில் கடந்த அக்டோடர் 2 முதல் 12 ஆம் தேதி வரை தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களுக்கு எதிரான பரப்புரை இயக்கம் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது.
தமிழகமெங்கும் மஜக-வினர் இதற்கு பேராதரவு கொடுத்து காளத்திலும் பங்கேற்றனர். அப்போது தமிழகம் எங்கும் பல்வேறு வடிவங்களில் பரப்புரை முன்னெடுக்கப்பட்டது.
திட்டச்சேரியில் போதைப் பொருட்களுக்கு எதிரான தீமைகளை விளக்கும் வகையில் IKP சார்பில் சிறுவர் சிறுமியர்களுக்கான பேச்சுப் போட்டி நடைப்பெற்றது.
இதில் 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர். அதில் வெற்றிப் பெற்றவர்களுக்கு தங்க காசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் பங்கேற்ற மற்றவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டது.
பரிசுகளை வழங்கி மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி Ex MLA அவர்கள் சிறப்புரையாற்றினார். மஸ்ஜித் இலாஹி இமாம் மவ்லவி ஜமால் அவர்கள் திருமறை வசனங்களை ஓதினார்.
பெரிய பள்ளிவாசல் இமாம் மவ்லவி ஹாஜா அவர்கள் சிற்றுரையாற்றினார். தொடர் மழைக்கிடையிலும் திரளானோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்தனர்.
இந்நிகழ்வை இஸ்லாமிய கலாச்சாரப் பேரவை (IKP) கிளை செயலாளர் கலில் சிறப்பாக ஒருங்கிணைத்தார். இந்நிகழ்வில் மாநில துணை செயலாளர் நாகை முபாரக், மாவட்ட செயலாளர் திட்டச்சேரி ரியாஸ், மாவட்ட பொருளாளர் சதக்கத்துல்லா, மாவட்ட துணை செயலாளர் ஷேக் அகமதுல்லா, IT WiNG மாவட்ட துணை செயலாளர் நிசாத், MJTS மாவட்ட துணை செயலாளர் முத்து, திட்டச்சேரி பேரூர் கழக செயலாளர் இப்ராஹிம், ஏனங்குடி IT WING மாலிக், ஜமாத் நிர்வாகிகள் மஸ்ஜீத இலாஹி ஹஜ்ரத் ஜமால் முஹம்மது, ஜாமிய மஸ்ஜித் ஹஜ்ரத் காஜா முஹையிதீன், பிறாகிரமம் ஜமாத் தலைவர் முஹம்மது அன்சாரி, ஆகியோர் பங்கேற்றனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப்.
Comments