தமிழக அரசின் கிராம சபை கூட்டம்..!! மக்களின் குறைகளைக் கேட்டறிந்து மனுக்களை பெற்று அமைச்சர்..!!

    -MMH 

    கோவை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக திரு செந்தில் பாலாஜி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து கோவை மாநகர் மாவட்டத்தில் நடைபெறும் அனைத்து கிராம சபைக் கூட்டங்களில் தலைமை ஏற்று மக்களின் குறைகளைக் கேட்டறிந்து மனுக்களைப் பெற்று வருகிறார் அமைச்சர் அவர்கள். இதன் தொடர்ச்சியாக நேற்று இரவு 8 மணி அளவில் விளாங்குறிச்சி ஜீவா திடலில் நடைபெற்ற மக்கள் சபை கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் மக்களின் குறைகளைக் கேட்டறிந்து மனுக்களை பெற்று மக்களிடம் உரையாற்றினார் . அவர் கூறுகையில் மனுக்கள் அனைத்தும் அரசு ஆணையாக மக்களிடத்தில் கொண்டு வந்து சேர்க்கப்படும் என்று  நம்பிக்கை தெரிவித்தார்.  இந்நிகழ்ச்சியில் கோவை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் திரு பையா கவுண்டர், முன்னாள் எம்எல்ஏ திரு நா.கார்த்திக் அவர்கள் திமுகவைச் சேர்ந்த வட்டக் கழக  பொறுப்பாளர்கள் பா ரஞ்சித், செல்வராஜ், மயில்சாமி,. கோவை மேற்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பிரபாகரன் , கட்சி நிர்வாகிகள் சுப்ரமணி, சபீக் , பிரவீன் , மணிவாசகம், திருமதி பல்கிஸ் , சத்தார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

-முகமது சாதிக் அலி.

Comments