தமிழக கேரள எல்லைப் பகுதியில் மின்சாரம் தாக்கி இருவர் பலி!! - மிகுந்த சோகத்தில் மக்கள்!!
பொள்ளாச்சி தமிழக கேரள எல்லைப் பகுதியான மீனாட்சிபுரம்
அடுத்த எல்லைக்காடுபகுதியில் உள்ள தங்கராஜ் கவுண்டர் தோட்டத்தில் மரம் ஏறும் கோவிந்தன் என்பவரின் மகன் விஜயன் ( இளைஞர் ) கடந்த சில தினங்களுக்கு முன்பு கள் இறக்க தென்னை மரம் ஏறும் வேலையில் ஈடுபட்டிருந்த பொழுது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகுந்த சோகத்தில் இருந்து வந்த நிலையில் பொள்ளாச்சி மீன்கரை சாலையில் உள்ள வாழை கொம்பு நாகூர் பகுதியைச் சேர்ந்த குழந்தைவேல் ( வயது 47 ) என்பவர் மீனாட்சிபுரம் ரயில்வே கேட் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் வேன் கிளீனராக வேலை செய்து வந்த நிலையில் பள்ளிக்கு அருகில் உள்ள தோட்டத்தில் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது அறுந்து கிடந்த மின்சார கம்பியை கவனிக்காமல் மிதித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதை அறிந்த ஆனைமலை காவல்துறை அதிகாரிகள் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேட்டைக்காரன்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இருவேறு விபத்துகளில் மின்சாரம் தாக்கி அடுத்தடுத்து இருவர் உயிரிழந்த சம்பவம் மீனாட்சிபுரம் சுற்றுவட்டார பொதுமக்களிடம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-M.சுரேஷ்குமார்.
Comments