பள்ளி மாணவி பாலியல் தொந்தரவுகளால் தற்கொலை கொண்டதற்கு நீதி கோரி மெழுகுவா்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் !!

 

-MMH

         கோவை மத்திய மாவட்ட சமூகநீதி மாணவா் இயக்கம் சார்பாக பள்ளி மாணவி பாலியல் தொந்தரவுகளால் தற்கொலை கொண்டதற்கு நீதி கோரி மெழுகுவா்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்  உக்கடம் வள்ளியம்மை பேக்கரி முன்பு SMI மாவட்ட செயலாளர் பாஷா தலைமையில் நடைபெற்றது. இதில் SMI மாநில துணைச் செயலாளர் கோவை அம்ஜத், தமுமுக விழி அமைப்பு மாவட்ட செயலாளர் அசாருதீன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

இப்போராட்டத்தில் தமுமுக மாவட்ட செயலாளர் முஜிபுா் ரஹ்மான், தமுமுக-மமக மாவட்ட பொருளாளர் அப்பாஸ், தமுமுக-மமக மாவட்ட துணை தலைவர் சிராஜுதீன், தமுமுக மாவட்ட துணை செயலாளர் ஆசிக், SMI மாவட்ட பொருளாளர் அஜ்மல், SMI மாவட்ட துணை செயலாளர்கள் ஆஷிக், பத்ருதீன், அஜ்மல், ஃபஹத், சித்தீக் உள்ளிட்ட கிளை நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் திரளாக பங்கேற்று கண்டன கோஷங்களை எழுப்பினர்.

பாதிக்கப்பட்ட மாணவியின் இல்லத்திற்கு சென்று மாணவியின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் சொல்லி உங்களோடு எப்போதும் நீதிக்காக தோளோடு தோள் நின்று பங்கெடுப்போம் என்று உறுதி அளித்தனர்

நாளைய வரலாறு  செய்திக்காக, 

-ஹனீப் கோவை.

Comments