சேவல் பிரச்சினையில் இளைஞர் கொலை! காவல்துறையினர் விசாரணை !!
மதுக்கரை -- நீலாம்பூர் பை பாஸ் சாலை, பாலத்துறை சாலை சந்திப்பு அருகில், ஆண் சடலம் கிடப்பதாக, நேற்றிரவு, மதுக்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சடலத்தை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
பலியானது, பாலத்துறை, முருகன் கோவில் வீதியை சேர்ந்த விஜய், (வயது23 ) என்பதும், விசாரணையில் ஒரு மாதத்திற்கு முன், நண்பர் சசிகுமார், விஜயிடம் ஒரு சேவலை கொடுத்து விற்க கூறியதால், அவரும் விற்று பணம் கொடுத்துள்ளார். இந்நிலையில், மதுக்கரை மார்க்கெட் பகுதியை சேர்ந்த சபீர், விஜயிடம், தனது சேவலை சசிகுமார் திருடி விற்க கொடுத்ததாக கூறி, சேவலை திரும்ப கேட்டுள்ளார். அவரும், சேவலை வாங்கியவரிடமிருந்து பெற்று திரும்ப கொடுத்துள்ளார். தொடர்ச்சியாக தனது பல சேவல்கள் திருட்டு போனதாகவும், அதை விஜய் தான் விற்றதாகவும் கூறி, மீண்டும் பணம் கேட்டு, சபீர் தொந்தரவு செய்து வந்துள்ளார்.நேற்று, உறவினர் விஷ்ணுவுடன் வந்த விஜயிடம், சபீர் மீண்டும் பணம் கேட்டுள்ளார். இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதால், ஆத்திரமடைந்த சபீர், கத்தியால் விஜயை குத்தியதால், சம்பவ இடத்திலேயே பலியானார். சபீர் உடன் வந்த நண்பர்கள் பினாஸ், தனுஷ் மற்றும் இருவர் அங்கிருந்து தப்பியது தெரியவந்தது. வழக்குப்பதிவு செய்த போலீசார், ஐந்து பேரையும் தேடுகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-S.ராஜேந்திரன்.
Comments