சாலையில் தோண்டப்பட்ட குழிகளை முறையாக மூடி செல்லாததால் வாகன ஓட்டிகள் கடும் அவதி!

    -MMH 

   கோவை மசக்காளிபாளையம் ஆலமரம் அருகில் சில வாரங் களுக்கு முன்பு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் அந்தப்பகுதியில் உள்ள சாலை தோண்டப்பட்டு குழாய் சரிசெய்யப்பட்டது. ஆனால் அந்த குழியை சரிவர மூடாமல் சென்றுவிட்டனர். இதனால் தற்போது சாலை சேறும் சகதியுமாக மாறி உள்ளதுடன், சாலையின் நடுவே உள்ள அந்த குழியில் தடுப்புகள் வைக்கப்பட்டு உள்ளன. எனவே ஆபத்தான முறையில் இருக்கும் அந்த குழியை உடனே சரிசெய்ய வேண்டும்.

மேலும் இதனால் அந்த இடத்தில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு வாகனங்கள் விபத்தில் சிக்கும் வாய்ப்பு உள்ளதாக பொதுமக்கள் கருதுகின்றனர் எனவே இதை உடனடியாக சீர் செய்யவேண்டும் என அப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுக்கிறார்கள்

நாளைய வரலாறு செய்திகளுக்காக ,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

- S.ராஜேந்திரன்.

Comments