கோவையில் இந்திய தொழில் கூட்டமைப்பின் ஐந்தாவது தேசிய உயர் கல்வி மாநாடு தொடக்கம்!!
கோவை, இந்திய தொழில் கூட்டமைப்பு இரண்டு நாள் தேசிய உயர் கல்வி மாநாடு துவங்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக கோவை, பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பி.காளிராஜ் கலந்துகொண்டு மாநாட்டினை தொடங்கி வைத்து பேசிய அவர், தொழில் நிறுவனங்களில் உள்ள உற்பத்தி முறை புதிய டிஜிட்டல் பயன்பாட்டுடன் மாறியுள்ளது. அதற்கு ஏற்ப மாணவர்களை கல்வி நிறுவனங்கள் தயார் செய்ய வேண்டும். தொழில் நிறுவனங்களை இணைத்து கல்வி முறையில் மாற்றம் கொண்டு வர சரியான நகரம் கோவையாகும். அதேபோல் இந்திய அளவில் தேசிய தரத்தைப் பெற்ற கல்லூரிகளில் தமிழ்நாட்டில் அதிக அளவில் கோவையைச் சார்ந்த கல்வி நிறுவனங்கள் பெற்றுள்ளது.இதை சரியாக பயன்படுத்தி பன்னாட்டு மாணவர்களை கோவையில் கல்வி பயில வர வேண்டும். புதிய கல்விக் கொள்கை உறுதியாக மாற்றத்தினை ஏற்படுத்த உள்ளது. கல்வித் துறையின் வளர்ச்சிக்கு நம் நாட்டில் உள்ள தற்போதைய திட்டங்களில் உள்ள சிறப்பான செயல்கள் பயன்பாட்டிற்கு பின்பற்றலாம், அது மட்டுமின்றி பன்னாட்டு நாடுகளில் உள்ள கல்விக் கொள்கையில் உள்ள சிறந்த அம்சங்களை நாமும் பயன் படுத்துவதில் முன் வரவேண்டும். அப்பொழுதுதான் சர்வதேச தரத்திற்கு நம் நாட்டின் கல்வி நிறுவனங்களை மாற்ற முடியும். தற்போதைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் 90 சதவீதம் பேர் தொழில் நிறுவனங்களின் தேவையை புரிந்து படிப்பினை தேர்வு செய்கின்றனர். இதனால் கலை அறிவியல் கல்லூரிகளில் அதிகம் பேர் சேர்கின்றனர். நாட்டின் கல்வி திட்டத்தின் எதிர்பார்ப்பினை தமிழ் நாடு சிறப்பாக செய்து வருகிறது என தெரிவித்தார்.இந்த மாநாட்டில் இந்திய தொழில் கூட்டமைப்பின் கோவை மாவட்ட துணைத் தலைவர் எஸ்.பிரசாந்த், கல்வி முயற்சி பிரிவின் துணைத் தலைவர் ஆர்.நந்தினி, கல்வி பிரிவின் ஒருங்கிணைப்பாளர் முனைவர். விஜிலா கென்னடி மற்றும் பல்வேறு கல்வியாளர்கள் பங்கேற்று பேசினார்கள். இதில் பல கல்வி நிறுவனங்களில் மற்றும் தொழில் நிறுவனங்களில் இருந்து வல்லுநர்கள் பங்கேற்றனர்.
- சீனி,போத்தனூர்.
Comments