நெல்லையில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை - மாமனார் மீது வழக்குப்பதிவு !!

 

-MMH

        நெல்லையை சேர்ந்த இளம்பெண்ணுக்கு வங்கி அதிகாரி ஒருவருடன் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடந்தது.திருமணம் முடிந்ததும் வங்கி அதிகாரி வேளாங்கண்ணி பகுதியில் உள்ள வங்கிக்கு சென்று விட்டார். இளம்பெண் மாமனார்- மாமியாருடன் கூட்டு குடித்தனமாக வசித்து வந்தார்.

அப்போது அந்த இளம்பெண்ணின் மாமனார் அவருக்கு ‘செக்ஸ்’ தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த பெண் தனது கணவர் மற்றும் மாமியாரிடம் கூறி உள்ளார். ஆனால் அவர்கள் அதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.

இதைத்தொடர்ந்து அந்த இளம்பெண் தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் அந்த இளம்பெண்ணின் கணவர் அந்த பெண் மீது விவாகரத்து வழக்கு தொடர்ந்துள்ளார். இதனால் பெண்ணின் பெற்றோர் கணவர் குடும்பத்தினருடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கணவர் மற்றும் மாமனார், மாமியார் ஆகியோர் அவதூறாக பேசி இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த இளம்பெண் பாளையில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி இளம்பெண்ணுக்கு ‘செக்ஸ்’ தொல்லை செய்த மாமனார் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த கணவர் மற்றும் மாமியார் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாளைய வரலாறு நெல்லை செய்தியாளர்,

-அன்சாரி. 


Comments