அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்.. முற்றிலுமாக முடிவு கட்டப்படும்.. கோவை மாநகர புதிய போலீஸ் கமிஷனர் உறுதி!!
கோவை மாநகர காவல் ஆணையராக பதவியேற்றுக்கொண்ட பிரதீப்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் சென்னையை அடுத்து கோவை மிக முக்கிய மாநகரமாகும். எனவே இங்கு சட்டம் ஒழுங்கு நன்றாக இருக்க வேண்டும். நகரம் அமைதியாக இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மகளிர் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்புக்கு வித்தியாசமான முறையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
பெண்கள் குழந்தைகள் மூத்த குடிமக்களுக்கு எதிரான குற்றத்திலிருந்து அவர்களை பாதுகாக்க சரியான விசாரணை நடத்தி நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சாலை விபத்தை குறைக்க வேண்டிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். திட்டமிட்ட குற்றங்களை தடுக்கும் வகையில் எனது நேரடி கண்காணிப்பு இருக்கும்,
சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். தொடரும் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களை குறைப்பது குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்,. பெண் குழந்தைகள் பாதுகாப்பில் மாணவிகளின் பெற்றோர், ஆசிரியர் ஆகியோரை ஒன்றிணைத்து அனைவரது ஒத்துழைப்புடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு பிரதீப்குமார் தெரிவித்தார்!!
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப் கோவை.
Comments