பருவ மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது!!
சென்னை மாநகாரட்சி 22 வது வட்டத்தில் வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2000 குடும்பங்களுக்கு 5 பல்வேறு இடங்களில் நிவாரணம் பொருட்கள் ( அரிசி, காய்கறிகள்) வழங்கும் நிகழ்ச்சியை ம.ம.க பொதுச்செயலாளர் ப.அப்துல்சமதுMLA தொடங்கி வைத்தார்.
ம.ம.க மாநில இளைஞரணி செயலாளர் புழல் S.A.ஷேக் முஹம்மது அலி BA.,LLB., தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் அப்துல் காதர், அப்துல் சமது, மாவட்ட துணைத் தலைவர் நசீர் அகமது, மாவட்ட துணைச்செயலாளர் முஹம்மது ரசாக், மாதவரம் பகுதி, செங்குன்றம் நகரம், அம்பத்தூர் பகுதி நிர்வாகிகள் , சோழவரம் ஒன்றிய நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.
-ருசி மைதீன், தஞ்சாவூர்.
Comments