பாலியல் தொல்லை பள்ளி மாணவி தற்கொலை முயற்சி!!
கோவையை அடுத்த கருமத்தம்பட்டி அருகே உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கும் கருமத்தம்பட்டி அருகே சங்கோதிபாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த ராமர் (வயது 39) என்பவருடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ராமர், மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த மாணவி நேற்று முன்தினம் விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.
பள்ளி நிர்வாகத்தினர் மாணவியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இச்சம்பவம் குறித்து கருமத்தம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் தற்கொலைக்கு முயன்ற மாணவியிடம் விசாரணை நடத்தினர். இதில் ராமர் மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது தெரிய வந்தது. இதையடுத்து வழக்கு பேரூர் அனைத்து மகளிர் போலீசாருக்கு மாற்றப்பட்டு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ராமர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
-அருண்குமார் கிணத்துக்கடவு.
Comments