கோவையில் பல இடங்களில் பைக் திருட்டு...!! போலீசில் பிடிபட்ட திருடர்கள்..!!


   -MMH 

    கோவை மாவட்டத்தில் பல இடங்களில் விலை உயர்ந்த பைக்குகளை திருடிய  கும்பல் சிசிடிவி காட்சி என்ற அடிப்படையில் போலீசில் பிடிபட்டனர்.

தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்பவர் ராஜன் இவர் அக்டோபர் 28 ஆம் தேதியன்று இரவு வேலை முடித்து விட்டு சூலூரில் உள்ள தான் தங்கியிருக்கும் இடத்துக்கு அருகாமையில் 140,000 மதிப்பிலான கேடிஎம் பைக்கை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். மீண்டும் அடுத்த நாள் காலையில் வேலைக்கு செல்ல தன் பைக்கை எடுக்க வந்த பொழுது தன்னுடைய  பைக்கை காணவில்லை என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். 

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் அதே பகுதியை சேர்ந்த வெங்கடபதி என்பவர் தான் நிறுத்தி வைத்திருந்த 80000 மதிப்புள்ள ஹீரோ பைக்கையும் இந்த கும்பலிடம் திருட்டில் பரி கொடுத்துள்ளார். 

இதையடுத்து இருவரும் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் சிசிடிவி காட்சி பதிவின் மூலம் இந்த திருட்டு கும்பலை தீவிரமாக விசாரித்து தேடி வந்தனர். இதையடுத்து துப்பு துலங்கியதின் பேரில் நேற்று கோவை போத்தனூர் வெங்கட்ராமன் பகுதியை சேர்ந்த முரளி என்ற சாதிக், மைல்கல் பகுதியைச் சேர்ந்த ஷாருக்கான் , போத்தனூர் ஸ்ரீராம் நகரைச் சேர்ந்த யாசர் மற்றும் நஞ்சுண்டாபுரம் பகுதியைச் சேர்ந்த ரசூல் ஆகிய 4 பேரை கைது செய்த போலீசார் விசாரணை செய்ததில் இவர்கள் பல இடங்களில் வாகனங்களை திருடி அதன் உதிரி பாகங்களை விற்று வந்தது தெரிய வந்திருக்கிறது. இவர்களிடம்இருந்து ஆறு உயர் ரக பைக்குகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-முகமது சாதிக் அலி.

Comments