சிங்கம்புணரியில் தனியார் கல்லூரி பேருந்து மோதியதில் முதியவர் கவலைகிடம்!
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அண்ணா நகரைச் சேர்ந்தவர், சேக் அப்துல்லா (வயது 65). குடை வியாபாரம் செய்து வருகிறார். இவர் நேற்று மாலை தனது வியாபாரத்தை முடித்து விட்டு மாலை 7 மணி அளவில் கிருங்காக்கோட்டை பிரிவு சாலை அருகே இருள் சூழ்ந்த பகுதியில் வந்துள்ளார். அப்போது நத்தத்தில் இருந்து சிங்கம்புணரியை நோக்கி தனியார் கல்லூரிப் பேருந்து ஒன்று வந்துகொண்டிருந்தது.
அந்த நேரத்தில் சாலையை கடக்க முயன்ற ஷேக் அப்துல்லா மீது அந்த கல்லூரி வாகனம் மோதியதில் அவர் பலத்த காயமடைந்து சாலையில் விழுந்தார். உடனடியாக அங்கிருந்த பொதுமக்களின் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சிங்கம்புணரி அரசு தலைமை மருத்துவமனையில் சேக் அப்துல்லா அனுமதிக்கப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து வந்த சிங்கம்புணரி போக்குவரத்துகாவல் ஆய்வாளர் மனோகரன், சார்பு ஆய்வாளர் குகன் ஆகியோர் சம்பவ இடத்தை ஆய்வு செய்து, போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து சிங்கம்புணரி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
-ராயல் ஹமீது, சிங்கம்புணரி.
Comments