குழந்தைகளுக்கான உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மையத்தை திறந்து வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!!

    -MMH

  கோவை ஜெம் மருத்துவமனையில் குழந்தைகளுக்கான உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சிறப்பு மையம் பள்ளி கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.ஜெம் மருத்துவமனையில் குழந்தைகளுக்கான உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சிறப்பு மையம் குறித்து ஜெம் மருத்துவமனை தலைவர் டாக்டர்.பழனிவேல் கூறியதாவது,

நம்நாட்டின் எதிர்காலம் நம்இளையசமுதாயத்தை பொறுத்தே அமையும். மிகச்சிறந்தஇளையசமுதாயத்தை உருவாக்க ஒன்றுகல்வி,மற்றொன்று ஆரோக்கியமாகும். இவைஇரண்டும் நல்லொழுக்கம் நற்பண்புள்ள குடிமகன்களை உருவாக்கும் என்பதைஅனைவரும் அறிவோம்.  தமிழக அரசுமுதல்வர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் இந்த ஏழை மக்களுக்கு இலவச கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை  செய்யப்படுகிறது.

இதுவரை சென்னை,மற்றும் கோவை ஜெம் மருத்துவமனையில் பலரும் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.டாக்டர்கள் சுவாமிநாதன், வினோத்,செந்தில்நாதன், பிரபு,வசீகரன் சென்னையில், விஜய்ஆனந்த்  சவுண்டப்பன், கான் , ஸ்ரீதர், ராஜீவ் கோயம்புத்தூரில்  இந்த சிறப்பு பிரிவில் உள்ளனர். இச்சிறப்பு பிரிவு சிறப்பாக செயல்பட்டு பலருக்கும் சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்க தொடர்ந்து பாடுபடுவோம் என்பதை இந்தாளில் ஜெம்மருத்துவமனை உறுதியளிக்கிறது என தெரிவித்தார்.  

கோவை,ஜெம் மருத்துவமனையில் உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோய் அறுவை சிகிச்சை மையம் கோவை ரேடியோசிட்டியுடன் இணைந்து குழந்தைகளுக்கான உடல் பருமன் விழிப்புணர்வு குறித்த போட்டி குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்டது. இந்தபோட்டியில் சிறுவயதில்குழந்தைகளுக்கு ஏற்படும் உடல் பருமனை தடுப்பது குறித்து வாட்ஸ்அப் வீடியோ வெளியீட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்றவர்களில் முதல்3 பரிசுகள் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்டது.

- சீனி,போத்தனூர்.

Comments