கோவை அருகே - கனமழையால் இடிந்து விழுந்த வீடு!

 

-MMH

      கோவை அருகே பேரூர் பகுதியில் கனமழையால் வீடு இடிந்து விழுந்தது. வீட்டில் யாரும் குடியிருக்காததால் அதிஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. பேரூர் மத்திபாளையத்தில், கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது; அதிர்ஷ்டவசமாக மூவர் உயிர் தப்பினர். தொண்டாமுத்துார் வட்டாரத்தில், ஒரு மாதத்துக்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை காரணமாக, பள்ள ஓடை, நொய்யல் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது.

கன மழையின்போது, மத்திபாளையம், தெற்கு வீதியை சேர்ந்த பெரிய பாப்பாத்தி என்பவரின் வீட்டின் பக்கவாட்டுச்சுவர் இடிந்து வெளிப்புறமாக விழுந்தது. வீட்டுக்குள் பாப்பாத்தி, அவரது தங்கை மற்று தம்பி ஆகியோர் துாங்கிக் கொண்டிருந்தனர். வீட்டின் சுவர் வெளிப்புறமாக இடிந்து விழுந்ததால், வீட்டின் உள்ளே துாங்கிக் கொண்டிருந்த மூவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அதேபோல, மத்திபாளையம், வடக்கு வீதி கார்த்தி என்பவரது வீட்டின் சுவரும், மழையின் போது இடிந்து விழுந்தது. பழைய வீடு என்பதால், யாரும் வசிக்கவில்லைஅதனால் உயிர் சேதம் இல்லை!

நாளைய வரலாறு செய்திக்காக

-ஹனீப் கோவை.

Comments