வருகையைப் பதிவு செய்வதுடன், உடல் வெப்பநிலை உள்ளிட்ட விவரங்களை கண்டறியும் கருவி!!
கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் வருகையைப் பதிவு செய்வதுடன், உடல் வெப்பநிலை உள்ளிட்ட விவரங்களை கண்டறியும் கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் மேலாண்மை துறை முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு வரவேற்பு விழா, கல்லூரியின் ஒருங்கிணைந்த ஆராய்ச்சி மையத்தின் புதிய கண்டுபிடிப்பான வெஸ் ஜெனக்ஸ் வருகைப் பதிவு கருவியின் அறிமுக விழா ஆகியவை கல்லூரி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றன.
கல்லூரி முதல்வா் என்.ஆா்.அலமேலு வரவேற்றாா். எஸ்.என்.ஆா். சன்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் நிா்வாக அறங்காவலா் டி.லட்சுமிநாரயணசுவாமி தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக கோவை ரூட்ஸ் குழுமத்தின் நிா்வாக இயக்குநா் எஸ்.சந்திரசேகா் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா்.
இதில், செயற்கை நுண்ணறிவு, கிளவுட் கம்ப்யூட்டிங் முறையில் இயங்கும் வெஸ் ஜெனக்ஸ் வருகைப் பதிவு கருவி அறிமுகப்படுத்தப்பட்டது. இயந்திரவியல், தகவல் தொழில்நுட்பத் துறை, செயற்கை நுண்ணறிவுத் துறை பேராசிரியா்கள், மாணவா்கள் உருவாக்கிய இந்த கருவி வருகையைப் பதிவு செய்வதுடன், உடல் வெப்பநிலை உள்ளிட்ட விவரங்களையும் பதிவு செய்யக் கூடியது.
நிகழ்ச்சியில், கல்லூரியின் தொழில் துறை மையத் தலைவா் கணேஷ், மேலாண்மை துறைத் தலைவா் மேரி மெட்டில்டா, பேராசிரியா்கள், மாணவ-மாணவிகள் பலா் பங்கேற்றனா்.
-சுரேந்தர்.
Comments