பல ஆண்டுகளாக தண்ணீர் கிடைக்காமல் வறண்டு காணப்பட்ட குளத்திற்கு தண்ணீர்!! நன்றி தெரிவித்த விவசாயிகள்!!

   -MMH 

    மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி மருள்பட்டி பெரிய குளம் பல ஆண்டுகளாக தண்ணீர் கிடைக்காமல் வறண்டு காணப்பட்ட நிலையில் அப்பகுதி விவசாயிகள் மற்றும் திமுகவினர் கோரிக்கையை ஏற்று பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பேசி குளத்திற்கு தண்ணீர் கொண்டு வந்த மாவட்ட பொறுப்பாளர் இரா.ஜெயராமகிருஷ்ணன்ex.MLA அவர்களுக்கும் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கு.சண்முகசுந்தரம் அவர்களுக்கும் அப்பகுதி விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.

பின்னர் விவசாயிகள் வேண்டுகோளை ஏற்று மருள்பட்டி குளத்தை இருவரும் பார்வையிட்டார்கள். இந்நிகழ்ச்சியில் மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் ஈஸ்வரசாமி ஆண்டியகவுண்டனூர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஈஸ்வரசாமி, லோகநாதன், அரசன் செல்வம், கண்ணமநாயக்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் கருப்பம்மாள் ஒன்றிய கவுன்சிலர் ராஜேஸ்வரி மருள்பட்டி கிளை செயலாளர் வளவன் கருப்பட்டி பாளையம் கிளை செயலாளர் சுந்தரசாமி உரல்பட்டி மகேஸ்வரன் மலையாண்டிகவுண்டனூர் அருளானந்தம்" மதியழகன் மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

-துல்கர்னி, உடுமலை.

Comments