கத்தை கத்தையா காசு ஆசைப்பட்டேன் எல்லாம் போச்சு!! கமிஷனுக்கு ஆசைப்பட்டு காசை தொலைத்த பரிதாபம்!!

     -MMH 

சிங்கநல்லூர் பகுதியில் கமிஷனுக்கு ஆசைப்பட்டு ரூபாய் 10 லட்சம் ரூபாயை பறிகொடுத்த நபர் காவல்துறை விசாரணை. 2000 ரூபாய் நோட்டுக்களை 500 ரூபாய் நோட்டுக்களாக மாற்றிக் கொடுத்தால் கமிஷன் என்று கூறி 10 லட்ச ரூபாயை மோசடி செய்த கும்பல். கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியை சேர்ந்தவர் ராஜா, கட்டிட காண்ட்ராக்ட் தொழில் செய்து வருபவர். 

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கட்டடத்தின் காண்ட்ராக்ட் முடித்துக் கொடுப்பதில் ரூபாய் 10 லட்சம் பெற்றுள்ளார் ராஜா. இதை அறிந்த அவரது நண்பர் ராஜாவிடம் 2000 ரூபாய்க்கு 500 ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொடுத்தால் பத்தாயிரம் ரூபாய்க்கு 2000 ரூபாய் கமிஷன் பெற்றுத் தரக்கூடிய நண்பர்களை தமக்கு தெரியும் என்று ராஜாவிடம் ஆசை வார்த்தை கூறியிருக்கிறார்.

இதை நம்பிய ராஜா அவரிடம் இருந்த 10 லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு நேற்று மாலை கோவை வந்துள்ளார். கோவை வந்த ராஜாவை ராகுல் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் ராஜாவை காரில் ஏற்றிக்கொண்டு பணத்தை மாற்றி தருவதாக கூறி சிங்காநல்லூர் குளத் ஏரி பகுதியில் உள்ள ஹோண்டா ஷோரூம் அருகாமையில் நேற்று மாலை அவரை காரில் இருந்து கீழே தள்ளி விட்டு பணத்தை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர். 

இதையடுத்து ராஜா சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பதிவு செய்த போலீஸார் தப்பியோடிய ராகுல் மற்றும் அவரது நண்பர்கள் மூன்று பேரையும் தேடி வருகின்றனர். கத்தை கத்தையாய் காசு வரும் என்று ஆசைப்பட்டு, உள்ளதையும் தொலைத்துவிட்டார் ராஜா. இன்று இதைப் பற்றி அறிந்தவர்கள் சலசலத்து கொள்வது சற்று சங்கடமாக இருந்தாலும் பேராசை பெரு நஷ்டம் தான் என்பதை இந்த சம்பவம் நமக்கு உணர்த்தி காட்டுகிறது.

-முஹம்மது சாதிக் அலி.

Comments