தஞ்சையில் கல்லறை திருநாள் கொண்டாட்டம்!!
ஆண்டுதோறும் நவம்பர் 2-ம் தேதி அனைத்து ஆத்மாக்கள் தினம்,கல்லறைத் திருநாளாக கிறிஸ்தவர்களால் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி இன்று செவ்வாய்க்கிழமை கல்லறைத் திருநாள் அனுசரிக்கபடுகிறது.
தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் அமைந்துள்ள கிருத்துவ கல்லறைகளில் ஏராளமானோர் தங்களது உறவினர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அருகில் அமைந்துள்ள தனியார் கல்லறை தோட்டத்திலும் ஏராளமானவர்கள் தங்களது உறவினர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர் .
இதனால் அந்த பகுதியில் ஏராளமான மலர், வாசனை திரவியங்கள் மற்றும் ஊதுபத்தி மெழுகுவர்த்தி விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காவல்துறையினர் அந்தப்பகுதியில் போக்குவரத்தை சீரமைத்து கனரக வாகனங்களை மாற்று வழியில் திருப்பி விடுகின்றனர். ஏராளமான கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாது இந்து மக்களும் தங்களது நண்பர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருவது மத நல்லிணக்கமாக பார்க்கப்படுகிறது.
மக்கள் மிகுந்த அமைதியுடனும் ஒழுக்கத்துடனும் கட்டுப்பாட்டுடனும் இறந்தவர்களை நினைத்து பிரார்த்தனை செய்தது பிரார்த்தனையின் மிகச் சிறப்பாகும்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ராஜசேகரன், தஞ்சாவூர்.
Comments