மின் கட்டணம் செலுத்த காலாவகாசம் நீட்டிப்பு!!!
வடக்கிழக்கு பருவக்காற்று பெரு மழையின் காரணத்தால் சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் பாதிப்படைந்து வருகின்றது.
சாலைகள் , மழைசேகரிப்பு குழாய்கள் , மழைநீர் வடிகால்களில் ஏற்பட்ட சேதாரத்தினால் சென்னை நகரம் உள்ளிட்ட மாவட்டத்தை ஒட்டிய திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீரில் மிதக்கின்றது. இதன் காரணத்தால் மக்களின் அத்தியாவசிய பணிகள் தடங்கள் ஏற்பட்டிருக்கின்றது .
இந்நிலையில் மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை இம்மாத இறுதி வரை நீட்டிப்பு செய்து அறிவிப்பு வெளியாகி உள்ளது , இதனால் வெள்ளத்திற்கு நடுவே மின்கட்டணம் செலுத்திடவேண்டுமே என்ற மக்களின் கவலை சிறிது தளர்ந்து ஆசுவாசமடைந்துள்ளனர்.
- நவாஸ், சென்னை.
Comments