ஆனைமலையில் சட்ட உதவி விழிப்புணர்வு முகாம், உயரதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்புரை, பொதுமக்கள் மகிழ்ச்சி !!

 

-MMH

        கோவை மாவட்டம் பொள்ளாச்சி 153 வது காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு பொள்ளாச்சி வட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் ஆனைமலை மகாத்மா காந்தி ஆசிரமம்  இணைந்து சட்ட உதவி மற்றும் விழிப்புணர்வு முகாம்   மீட்கப்பட்ட கொத்தடிமைகள் பகுதி, அண்ணாநகர், சேத்துமடை பகுதியில் நேற்று மாலை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, குண்டு வெடிப்பு வழக்குகள் சிறப்பு நீதிமன்ற கோவை மாவட்ட நீதிபதி பாலு தலைமை தாங்கினார் மேலும் சட்ட உதவி வழக்கறிஞர் ஆனைமலை  ரங்கநாதன், பொள்ளாச்சி வட்டப் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பு நீதிபதி பாலமுருகன், பொள்ளாச்சி  முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆனந்தி, பொள்ளாச்சி கூடுதல் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி சுபாஷினி, பொள்ளாச்சி குற்றவியல் நீதித்துறை நடுவர் செல்லையா, வழக்கறிஞர் ரமேஷ் குமார் ஆகியோர் கலந்துகொண்டு இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினர்கள்.

இந்நிகழ்ச்சியில் நமது நாட்டுக்கு சுதந்திரம் கிடைக்க அகிம்சை முறையில் பல இன்னல்களை சந்தித்து வெற்றி கண்ட மகாத்மா காந்தி குறித்து மக்களிடம் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற சம்பவங்கள் அதிகரித்துவரும் இந்த சூழ்நிலையில் பெண்கள் பாதுகாப்புடன் இருப்பது எப்படி யாரேனும் பெண்களிடம் தவறாக நடக்க முற்பட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும் உள்ளிட்டவை குறித்து எடுத்துரைக்கப்பட்டது.  பெண்கள் பாதுகாப்பு வன்கொடுமை சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் அகிலாண்டபுரம் முருகன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக பெண்கள் அதிக அளவில் கலந்து கொண்டனர்.  இந்நிகழ்ச்சி பாதுகாப்புடன் நடைபெற கடமை கண்ணியம் என்ற சிந்தனை அடிப்படையில் ஆனைமலை காவல்துறை  எஸ் ஐ .சின்னகாமணன், எஸ் எஸ் ஐ . முருகவேல், காவல்துறையினர்  அருண், கார்த்தி, ஆகியோர் ஆரம்பம் முதல் இறுதி வரை இருந்து பாதுகாப்பு வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


 -M.சுரேஷ்குமார்.

Comments