சமையல் செய்யும் போது ஏற்பட்ட தீ விபத்தால் வாலிபர் காயம் மருத்துவமனையில் அனுமதி!
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் உள்ள நல்ல காத்து முதல் பிரிவு என்ற இடத்தை சேர்ந்தவர் வினோத் (வயது 21).
இவர் வீட்டில் சமையல் செய்து கொண்டு இருந்த பொழுது அருகில் இருந்த மண்ணெண்ணெய் தவறுதலாக தட்டி விடப்பட்டு அவரின் மேல் கொட்டியது அந்த சமயத்தில் தீவிபத்து ஏற்பட்டு அவரின் உடலில் தீப்பற்றி எரிய தொடங்கியது. மளமளவென பரவிய தீயால் அலறி துடித்தபடி வெளியே ஓடிவந்த அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை வரவழைத்து வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதனால் அந்தப் பகுதியில் உள்ள மக்கள் சோகத்தில் ஆழ்ந்து உள்ளார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-திவ்யா குமார் (வால்பாறை), S.ராஜேந்திரன்.
Comments