கோவையில் இருந்து சென்னை செல்லும் விமானங்கள் ரத்து!!
சென்னையில் பெய்து வரும் பலத்த மழையால் சென்னை விமான நிலையம் முற்றிலுமாக மழை வெள்ளத்தில் மூழ்கியது. இதனால், விமானப் போக்குவரத்து பாதிப்படைந்தது. இதன் காரணத்தால் சென்னையிலிருந்து கோவை வரும் விமானங்கள் மற்றும் கோவையில் இருந்து சென்னை செல்லும் விமானங்கள், நேற்று ரத்து செய்யப்பட்டன. சென்னையிலிருந்து வரும் 2 விமானங்கள் மற்றும் கோவையில் இருந்து செல்லும் 2 இண்டிகோ விமானங்கள் நேற்று ரத்துசெய்யப்பட்டன. மேலும் சென்னை வழியாக டில்லி செல்லும் ஏர் இந்தியா விமானம், கோவையிலிருந்து நேரடியாக டில்லி புறப்பட்டு சென்றது. இந்தத் தொடர் மழையால் விமானம் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
-அருண்குமார், கிணத்துக்கடவு.
Comments