சபரிமலை விவகாரம் - சபரிமலை அய்யப்ப சேவா சமாஜம் அறிவிப்பு !!

 

-MMH 

     கோவை-'சபரிமலை பக்தர்களுக்கு, கேரள அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கிறது. அவற்றை விலக்கிக் கொள்ளா விட்டால், நாடு முழுதும் உள்ள பக்தர்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்' என, சபரிமலை அய்யப்ப சேவா சமாஜம் அறிவித்துள்ளது.சபரிமலை அய்யப்ப சேவா சமாஜத்தின் தேசிய செயற்குழு கூட்டம், கோவை எட்டிமடை அமிர்தா கல்லுாரியில், நேற்று துவங்கியது. 

இரண்டு நாட்கள் நடக்கும் கூட்டத்துக்கு, சமாஜத்தின் துணைத் தலைவர் குமார் தலைமை வகித்தார். தேசிய பொதுச் செயலர் ராஜன், அறங்காவலர் பிரகாஷ் முன்னிலை வகித்தனர்.தீர்மானங்கள் விபரம்:தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து, சபரிமலை செல்லும் பக்தர்கள் எரிமேலி யாத்திரைக்கு வரும்போது, யாத்திரை ஒன்றுக்கு ஐந்து நபர்களை மட்டுமே அனுமதிக்கின்றனர்.இதை கண்டிப்பதோடு, அதிக பக்தர்களை அனுமதிக்க வேண்டும்.பம்பையில் பக்தர்கள் நீராடுவதற்கு அனுமதி வழங்க வேண்டும். சபரிமலை சன்னிதானத்தில் நடக்கும் நெய் அபிஷேகத்தில், பக்தர்கள் தரிசிப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும்.கேரள சுகாதார அமைச்சர் மற்றும் அதிகாரிகள், சபரிமலை பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை வைக்கின்றனர்.அவற்றை விலக்கிக் கொள்ள வேண்டும். இதே நிலை நீடித்தால், நாடு முழுதும் பக்தர்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இன்றும், செயற்குழு நடக்கிறது.

-சுரேந்தர்.

Comments