கும்பகோணம் கபிஸ்தலம் பகுதியில் எம்.எல்.ஏ. ஆய்வு..!!

 

-MMH

         பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் பாபநாசம் வட்டம் கபிஸ்தலம் சரக வருவாய் கிராமங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் முனைவர் எம் எச் ஜவாஹிருல்லா அவர்கள் இன்று பார்வையிட்டார். 

திருமண்டங்குடி, துரும்பூர், கொங்கன் சாலை, ஆதனூர்,சத்தியமங்கலம், வாழ்க்கை, உமையாள்புரம், இராமானுஜபுரம், உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை பார்வையிட்டு விவசாயிகளிடம் குறைகளை கேட்டார். 

இப்பகுதியில் உள்ள வடிகால் மற்றும் பாசன வாய்க்கால்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தார். கூனஞ்சேரியில் கால்நடை மருத்துவமனை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கால்நடைகளுக்கான நோய் தடுப்பூசி போடும் முகாமை துவக்கி வைத்தார்.

கொள்ளிடம் ஆற்றின் கரையில் செய்யப்பட்டுள்ள வெள்ளத் தடுப்பு பணிகளை பார்வையிட்டார், இந்த ஆய்வின் போது பாபநாசம் வட்டார வேளாண் உதவி இயக்குநர் மோகன், தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் கோவி அய்யாராசு, பாபநாசம் வடக்கு ஒன்றிய செயலாளர் கோ.தாமரைச்செல்வன், 

பாபநாசம் ஊராட்சி ஒன்றியக் குழு பெருந்தலைவர் சுமதி கண்ணதாசன், மனிதநேய மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மைதீன், மாநில செயற்குழு உறுப்பினர் ஹிபாயத்துல்லா, 

ஒன்றிய கவுன்சிலர்கள் விஜயன், ஹாஜா மைதீன் ஊராட்சி மன்ற தலைவர்கள் N.பிரபாகரன், K.செல்வராஜ், D.விஜி,சித்ரா மகாலிங்கம், பாலா, மகாலிங்கம்,யசோதா சரவணன்,ராஜ் குமார்,கற்பகம் இராஜேந்திரன்,சுதா பிரபு, மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். 

-ருசி மைதீன் தஞ்சாவூர்.

Comments