A.R.M. மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடந்த குழந்தைகள் தின விழா நினைவு போட்டிகள்..!!

 

-MMH

       தண்ணீர்பந்தல் பகுதியில் இயங்கிவரும் ஏ ஆர் எம் மெட்ரிகுலேஷன் பள்ளியில் குழந்தைகள் தின விழா நினைவாக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன இதில் மாறுவேட போட்டி, கவிதைப்போட்டி, ஃபேஷன் ஷோ போன்றவைகள் நடத்தப்பட்டது.  

பள்ளியின் தலைமை ஆசிரியை லதா வெங்கடேசன் P.h.d அவர்கள் முன்னிலையில் அனைத்து போட்டிகளும் நடைபெற்றன. போட்டிகளில் பங்கேற்ற அனைத்து குழந்தைகளையும் தலைமை ஆசிரியை மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பாராட்டி உற்சாகப்படுத்தினார்.  

குழந்தைகளின் திறமையை வெளிக்கொணரும் பள்ளிக்கூடத்தின் இதுபோன்ற நிகழ்ச்சிகள் தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்துக்கு தங்களின் வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர்.

-முகமது சாதிக் அலி.

Comments