தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் Access to Justice for All இணைந்து பொள்ளாச்சியில் பிளாஸ்டிக்கின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் !

  

-MMH

       கோவை மாவட்டம்  பொள்ளாச்சி  தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் Access to Justice for All இனைந்து  பொது மக்களுக்கு பிளாஸ்டிக்கின் தீமைகளை எடுத்துரைத்து பிளாஸ்டிக்கை தவிர்ப்போம்  உலகத்தை காப்போம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். 

இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி மீன்கரை சாலை ஊத்துக்குளி சுற்றுவட்டார பகுதிகளில் சமூக ஆர்வலர் அகிலாண்டபுரம் முருகன் மக்களிடையே பிளாஸ்டிக்கை தவிர்க்கும்படி அன்பான வேண்டுகோள் விடுத்து    நோட்டீஸ் வழங்கி விழிப்புணர்வு செய்து வருகிறார்.

நோட்டீஸில் இடம்பெற்றுள்ள வாசகங்கள் மண்ணில் முளைத்த எல்லாமே மண்ணுக்கே இரையாகும் - பிளாஸ்டிக்கை தவிர தவிர்ப்போம் தவிர்ப்போம் -  பிளாஸ்டிக் பைகளை தவிர்ப்போம் காப்போம் காப்போம் மலைவளம் காப்போம் பிளாஸ்டிக் பைகளை தவிர்ப்போம் - மண் வளம் நீர் வளம் காப்போம்,  மலைகளில் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு - கொடுத்திடும் இயற்கைக்கு சீர்கேடு பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு எளிதாகும் - விட்டு எறிந்தால் விஷமாகும்,

துணிப்பை என்பது அழகானது - தூர எறிந்தாள் உரமாகும்  எனவே வரும் தலைமுறை சிறக்க தவிர்த்திடுவோம் பிளாஸ்டிக்கை பிளாஸ்டிக் இல்லாத உலகம் தூய்மையான வளாகம், பழைய டயர், பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகளை ஒழிப்போம் ஏடிஸ் கொசு உற்பத்தியை தவிர்ப்போம். வேண்டாம் வேண்டாம் பிளாஸ்டிக் வேண்டவே வேண்டாம். பிளாஸ்டிக் பூமியை தேசப்படுத்தும். வாகனம் தரும் புகை, பூமிக்கு பெரும் பகை. நமது குடிநீர்,நமது சுகாதாரம், நமது கையில். என்ற சிந்தனையோடு முடிகிறது.

M.சுரேஷ்குமார்.

Comments