ஜெய்பீம் பட விவகாரம் 5 கோடி நஷ்ட்ட ஈடு கேட்டு நடிகர் சூர்யாவுக்கு நோட்டீஸ்!!
தீபாவளியொட்டி நவம்பர் 4 அன்று ஓடிடி தளத்தில் நடிகர் சூர்யா தயாரிப்பு மற்றும் நடிப்பில் வெளியாகியுள்ள #ஜெய்பீம் திரைப்படமானது பல்வேறு தரப்பு மக்களால் விமர்சனரீதியாக நேர்மறை கருத்துக்களை உண்டாக்கியுள்ளது .
மறுபுறம் இப்படம் தங்களின் மனம் புண்படும் வகையில் ஒரிரு காட்சிகள் உள்ளதாகவும் , இதனால் வன்னியர் சமுதாயத்தை தவறாக சித்தரிக்கபட்டுள்ளதாகவும், பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் பல்வேறு எதிர்விமர்சனங்களை சமூகவலைத்தளங்களில் செய்துவருகின்றனர்.
இந்நிலையில் இரு நாட்களுக்கு முன் நடிகர் சூர்யா தனது பெயரில் அன்புமனி ராமதாஸூக்கு பத்திரிகை செய்தியினை வழங்கியதும் மிகப்பெரும் விவாதக்களமாகவே மீடியாக்களில் பேசப்பட்டது .
தற்போது இதற்கு பதில் நடவடிக்கையாக படத்தில் காட்டப்படும் குருமூர்த்தி பெயரை மாற்றவேண்டும் , காட்சிகளில் வரும் கும்பத்தை மறைத்திட வேண்டும் இல்லையென்றால்
ரூ.5 கோடி நஷ்ட்ட ஈடு கேட்டு வழக்கு தொடுக்கப்படும் என்று வன்னியர் சங்கத் தலைவர் அருள்மொழி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இவ்விடயத்தை சூர்யா எப்படி கையாளப்போகின்றார் என்பதை சில நாட்களில் தெரிந்துக்கொள்ளலாம்.
-நவாஸ்.
Comments