சிங்கம்புணரி சுற்றுவட்டாரத்தில் நாளை வழக்கம் போல் 30 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்கள்! சிவகங்கை மாவட்ட ஆட்சியர் சிறப்பு கவனம்!
தமிழ்நாட்டில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணியில் அரசு தீவிரமாக உள்ளது. இதையொட்டி ஒவ்வொரு வாரமும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வந்தது. இதற்காக 50 ஆயிரம் முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வந்தது.
அதேபோல் நாளை (சனிக்கிழமை) 8-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக 16 மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் காரணத்தாலும் வேறு சில காரணங்களாலும் நாளை நடைபெற இருந்த மெகா தடுப்பூசி முகாம் ரத்து செய்யப்படுவதாக இன்று காலை சுகாதாரத்துறை அறிவித்தது.
ஆனால், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அவர்களின் சிறப்பு கவனத்தின் காரணமாக மாவட்டம் முழுவதும் நாளை வழக்கம்போல் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. சிங்கம்புணரி சுற்றுவட்டாரத்தில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள் இன்று மாலையோ அல்லது நாளை காலையோ அறிவிக்கப்படலாம் எனவும் பிரான்மலை ஆரம்ப சுகாதார நிலைய வட்டாரத்தில் கூறப்படுகிறது.
-பாரூக், சிவகங்கை.
Comments