உள்ளாச்சி தேர்தலுக்கான வார்டு வாரியான வாக்காளர் பட்டியல், வரும், 25-ல் வெளியிடப்படுகிறது.

   -MMH 

   உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் துரிதமாக  நடந்து வருகின்றன. ஓட்டுச்சாவடிகள் இறுதி செய்யப்பட்டு, அதன் பட்டியல் அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கன்ட்ரோல் யூனிட்டுகள் தயார்படுத்தும் பணி நடந்து வருகிறது.

இச்சூழலில், வார்டுவாரியான வாக்காளர் பட்டியலை இறுதி செய்ய, தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல் வழங்கியிருக்கிறது. திருத்தங்கள் செய்தபின், வாக்காளர் பட்டியலை புகைப்படம் இல்லாமல், 21-க்குள் தயார் செய்ய வேண்டும்.

வரும், 24 -க்குள் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை பதிவிறக்கம் செய்து, அச்சுக்கு அனுப்ப வேண்டும். 25ம் தேதி பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடுவதோடு, அரசியல் கட்சிகளுக்கு நகல் வழங்க வேண்டும் என, மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கான பணிகளில், கோவை மாநகராட்சி தேர்தல் பிரிவினர் விரைவாக ஈடுபட்டிருக்கின்றனர். ஓட்டு எண்ணிக்கை மையமாக, ஜி. சி. டி. , தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில், 10 சட்டசபை தொகுதி ஓட்டுகள் எண்ணப்பட்டது போல், தலா, 10 வார்டுகளாக பிரித்து, ஒரே நேரத்தில், 10 அறைகளில் ஓட்டுகள் எண்ணப்படும். ஒவ்வொரு அறைக்கும் இரண்டு உதவி தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்படுவர்.

ஓட்டு எண்ணிக்கை மையத்தை தயார்படுத்தும் பொறுப்பு, நகர பொறியாளர் (பொ) ராமசாமிக்கு வழங்கப்பட்டுள்ளது!!

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஹனீப் கோவை.

Comments