+2 மாணவி தற்கொலை வழக்கில் தனிப்படை போலீசார் தீவிரம்!! - 4இடங்களில் தனிப்படை போலீஸ் சோதனை!!

   -MMH 

  +2 மாணவி தற்கொலை வழக்கில் தனிப்படை போலீசார் தீவிரம். மாணவி வீடு, பள்ளி முதல்வர் அறை, ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி வீடு , மாணவியின் நண்பர் வீடு ஆகிய 4 இடங்களில் தனிப்படை போலீஸ் சோதனை.

கோவை உக்கடம் பகுதியில் வசித்து வந்த 17 வயது மாணவி தனியார் பள்ளியில் படித்து வந்தார். கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார். தொடர்ந்து பள்ளியின் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியும் பள்ளி முதல்வரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

தொடர்ந்து தனிப்படை போலீசார் மேலும் கடிதத்தை உண்மைத் தன்மையை அறியும் சோதனையில் ஈடுபட்டனர். கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது பெண்ணுடைய கையெழுத்து தானா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தினர்.

உண்மையான குற்றவாளிகளை கைது செய்யும் நோக்கத்தோடு தனிப்படை போலீசார் தீவிரமாக இந்த வழக்கை கையில் எடுத்து செயல்படுத்தி வருகின்றன. இதனைத் தொடர்ந்து இன்று தனிப்படை போலீசார் மாணவி வீடு, பள்ளி முதல்வர் அறை, ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி வீடு , மாணவியின் நண்பர் வீடு ஆகிய 4 இடங்களில் தனிப்படை போலீஸ் சோதனை நடந்துள்ளது. 2 செல்போன், ஒரு மடிக்கணினி ஆகியவற்றை கைப்பற்றி போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர்.

தொடர்ந்து கைப்பற்றப்பட்ட பொருட்கள் அனைத்தும் உண்மை தன்மையை கண்டறியும் ஆய்வுக்கு அனுப்பப்படும். தொடர்ந்து செல்போன் மற்றும் லேப்டாப்புகள் பதிவுகள் மற்றும் சாட்டிங் போன்றவற்றை ஆய்வு செய்யப்படும்.

தொடர்ந்து மேலும் மாணவிக்கு யார் யாரெல்லாம் தொல்லை கொடுத்தார்கள் என்ற உண்மை தன்மையை கண்டறியும் நோக்கில் போலீசார் இந்த சோதனையை மேற்கொண்டதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்!!

நாளைய வரலாறு செய்திக்காக, 

-ஹனீப் கோவை.

Comments